அகலிகைப் படலம் - 506

bookmark

இந்திரன் திதியின் கருவைச் சிதைத்தல்

506.    

‘கேட்ட வாசவன். அன்னவட்கு
   அடிமையில் கிடைத்து.
வாட்டம் மா தவத்து உணர்ந்து.
   அவள் வயிற்று உறு மகவை
வீட்டியே எழு கூறு செய்
   திடுதலும். விம்மி.
நாட்டம் நீர் தர. “மருத்து” எனும்
   நாமமும் நவின்றான்.
 
மருத்து - வாயு.

திதி     என்பவள்   தன்னைக்   கொல்லும் மகனைப் பெறத் தவம்
புரிகிறாள்    என்பதையறிந்த    இந்திரன்   அவளுக்குப்  பணியாளாக
அமைந்தான்;   அவளது    கருப்பத்தைப் பிளந்து சிதைத்தான்; அவள்
விருப்பப்படி    அந்த  ஏழு  துண்டங்களுக்குச்    சப்த  மருத்துக்கள்
என்னும் பெயரிட்டான் என்பது.                              3-27