அகலிகைப் படலம் - 495

bookmark

இந்திரன் செல்வம் யாவும் கடலில் மறைதல்

495.    

‘அரமடந்தையர். கற்பகம்.
   நவ நிதி. அமிர்தம்.
சுரபி. வாம் பரி. மதமலை.
   முதலிய தொடக்கத்து
ஒரு பெரும் பொருள் இன்றியே
   உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடின. கண்ணன் வாழ்
   வெண்ணெய் மேவாரின்.
 
நவநிதி  -  மகா பதுமம். பதுமம். சங்கம். மகரம். கச்சபம். முகுந்தம்.
குந்தம். நீலம். வரம் என்பன;புதியனவாகிய சங்க நிதி. பதுமநிதி.

துருவாசன்   சாபத்தால் இந்திரன் செல்வங்களான தேவ மாதர். கற்ப
மரங்கள்.   நவநிதிகள்.   பாலைக்கறக்கும்  காமதேனு.  வெண் குதிரை.
ஐராவத யானை ஆகியன பாற்கடலில் மறைந்தன என்பது.         3-15