அகலிகைப் படலம் - 492

bookmark

துருவாசமுனிவர் இந்திரனை வெகுளுதல்

492.    

‘புகை எழுந்தன. உயிர்த்தொறும்;
   எயில் பொடித்தவனின்
நகை எழுந்தன; நிவந்தன புருவம்.
   நல் நுதலில;
சிகை எழும் சுடர் விழியினன்.
   அசனியும் திகைப்ப.
“மிகை எழுந்திடு சதமக!
   கேள்” என வெகுண்டான்.
 
சதமகன்-  இந்திரன்  -  நூறு  அசுவமேத  வேள்விகளைச்செய்து
இந்திர பதவி பெற்றவன்; எயில் - பட்டணம் - ஆகுபெயர்.

கோபத்தால்  துருவாச   முனிவனின்   மூச்சில்  புகை  கிளம்பியது;
சிரிப்பு எழுந்தது; புருவங்கள் நெற்றியில் ஏறின என்றார்.          3-12