அகலிகைப் படலம் - 487
487.
‘அரம்பை. மேனகை. திலோத்தமை.
உருப்பசி. அனங்கன்
சரம் பெய் தூணியின் தளிர் அடி
நூபுரம் தழைப்ப.
கரும்பையும் சுவை கைப்பித்த
குதலையர். விளரி
நிரம்பு பாடலோடு ஆடினர்.
வீதிகள் நெருங்க.
அரம்பை - நளகூபரனின் போகமடைந்தை; திலோத்தமை -
பிரமனால் படைக்கப்பட்டவள்; ஊர்வசி - நாராயண முனிவனது
தொடையிலிருந்து (ஊரு) தோன்றியவள்.
அரம்பை முதலான தேவதாசிகள் நால்வரும் பாடிக்கொண்டும்
ஆடிக்கொண்டும் தெருக்களில் சென்றார்கள் என்பது. 3-7
