அகலிகைப் படலம் - 483

bookmark

விஞ்சைமகள் மாலையைத்
துருவாசமுனிவருக்கு அளித்தல் (483-484)

483.    

‘அன்ன மாலையை யாழிடைப்
   பிணித்து. அயன் உலகம்.
கன்னி மீடலும். கசட்டுறு
   முனி எதிர் காணா.
“என்னை ஆளுடை நாயகிக்கு
   இசை எடுப்பவள்” என்று.
அன்னள் தாள் இணை வணங்கிநின்று
   ஏத்தலும். அனையாள்.
 
அந்த     வித்தியாதரப்பெண் பூமாலையை யாழிலே கட்டிக்கொண்டு
பிரம்மலோகம்   திரும்பினாள்.     அப்பொழுது   துருவாச  முனிவன்
அவளை எதிரே கண்டு அவளடிகளில்   வீழ்ந்து வணங்கினான் என்பது.
இதனால்  துருவாசரின்  திருமால்  பக்தி   புலனாகிறது. இவன் பிறரைச்
சபிக்கச்  சபிக்கத்  தவம்  வளரும் வரம்    பெற்றவன். இவன் அத்திரி
முனிவன் மகன்.                                           3-3