ஃபால்ஸ் நியூஸ்
1. "ஜலதோஷம் தாங்க முடியலை டாக்டர்.."
"சரி, அதுக்கு ஏன் ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தீங்க...?"
"ஆவி பிடிக்கலாமேன்னு தான்!"
2. "இட்லி சாஃப்ட்டா இருக்குமா?"
"சாப்ட்டா இட்லி இருக்காது வயித்துக்குள்ள போயிடும்."
3. "குற்றாலம் அருவியைப்பற்றிய செய்தி எதையும் நம்பாதே"!
"ஏன்...?"
"அது ஃபால்ஸ் நியூஸாச்சே!"
4. "உங்க முகத்தை இதுக்கு முன்னால் எங்கயோ பார்த்த ஞாபகமிருக்கே...?"
"இருக்காதே... பிறந்ததுலயிருந்து என் முகம் என் உடம்புலதான் இருக்கு!"
5. "ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?"
"ஏன் கேக்கறீங்க?"
"ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாரம்னு சொல்றாரே..!"
