ஸ்பிலிட் பர்சனாலிட்டி
"இனி ஒரு விதி செய்வோம்னு தலைவர் முழங்கறாரே... எதுக்காம்?"
"எல்லா விதிமீறல்களையும் செஞ்சுட்டாராம்.... புதுசா செய்யறதுக்காம்!"
"மரம் ஏறத் தெரியும்னு சொன்னாரேன்னு, என் கணவரை தென்னை மரம் ஏறச் சொன்னது தப்பாப் போச்சு!"
"ஏன்.... கீழே விழுந்துட்டாரா?"
"இல்லை.... இறங்கத் தெரியாதுன்னு மரத்து மேலயே உட்கார்ந்திருக்கார்!"
"போகாதே... போகாதேன்னு நவக்கிரக சன்னதியில நின்னு தொண்டர்கள் எதுக்கு கோஷம் போடறாங்க?"
"தலைவரோட ராசிக்கு சனி எட்டுல போறாராம்... அதை நிறுத்தறதுக்குத்தான் போராட்டம் நடத்தறாங்க!"
"சாராயம் காய்ச்சின புத்தி தலைவரை விட்டுப் போக மாட்டேங்குது!"
"ஏன், என்னாச்சு?"
" 'ஊழல்'னு சொல்றதுக்குப் பதிலா 'ஊறல்... ஊறல்'னே சொல்றாரே!"
"என்னது... அவரு மூணு சுயசரிதை எழுதியிருக்காரா..?"
"ஆமாம்... அவருக்கு 'ஸ்பிலிட் பர்சனாலிட்டி' நோய் இருக்கே..!"
