ஸ்டுடியோ வாட்சுமேன்
"விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு மாத்திட்டாரு!"
"அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!"
"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?"
"உங்க அம்மா மட்டும்தான் வர்றாங்களா..?"
"ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"
"உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!"
"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"
"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்."
"யாரது?"
"ஸ்டுடியோ வாட்சுமேன்!"
"நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு"
"எப்படி சொல்றே?"
"விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில் சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு.."
