வேள்விப் படலம் - 462
அரக்கர் சினந்து பொருதல் (462-463)
462.
எய்தனர்;எறிந்தனர்; எரியும். நீருமாய்ப்
பெய்தனர்; பெரு வளர பிடுங்கி வீசினர்;
வைதனர்; தெழித்தனர்; மழுக் கொண்டு ஓச்சினர்;
செய்தனர். ஒன்று அல தீய மாயமே.
எய்தனர் - (அவ்வரக்கர்) அம்புகளை வில்லில் தொடுத்து
எய்தார்கள்; எறிந்தனர் - சூலம் வேல் முதலியவைகளை எடுத்து
மேலே எறிந்தார்கள்; எரியும் நீரும் ஆய் பெய்தனர் - நெருப்பையும்
தண்ணீரையும் பெய்தார்கள்; பெருவதை பிடுங்கி வீனர் - பெரிய
மலைகளைப் பிடுங்கி வீசினார்கள்; வைதனர் தெழித்தனர் -
வைதார்கள். அதட்டினார்கள்; மழுக்கொண்டு ஓச்சினர் - மழுவை
எடுத்துக் கொண்டு வீசினார்கள்; ஒன்றல தீய மாயம் செய்தனர் -
பலவிதமான மாயச் செயல்களைச் செய்தார்கள்.
எய்தல்: அம்யெய்தல். பெய்தல்: கொட்டுதல். எறிதல் : வேலெறிதல்.
வரை: மலை. வைதல்: நிந்தித்தல். தெழித்தல்: அதட்டுதல். மழு:
மழுப்படை. ஒச்சல்: வீசுதல். மாயம்: மாயச் செயல்கள். ஒன்று அல:
ஒன்றல்லாத பல செயல்கள் என்ற பொருளை உணர்த்தும். 43
