வேள்விப் படலம் - 459
வேள்வியை இராமலக்குமணர் காத்தல்
459.
எண்ணுதற்கு. ஆக்க. அரிது
இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய
முனிவன் வேள்வியை.
மண்ணினைக் காக்கின்ற
மன்னன் மைந்தர்கள்.
கண்ணினைக் காக்கின்ற
இமையின் காத்தனர்.
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்- நல்லாட்சி
செய்து காக்கும் மன்னனான தயரதனுடைய மைந்தர்களான இராம.
இலக்குவர்கள்; முனிவன் விண்ணவர்க்கு ஆக்கிய வேள்வியை -
விசுவாமித்திர முனிவர் தேவர்களின் பொருட்டுச் செய்த வேள்வியை;
கண்ணினைக் காக்கின்ற இமையின் - கண்விழியைக் காக்கும்
இமைபோல; இரண்டு மூன்று நாள் காத்தனர் - ஆறு நாட்கள் வரை
காப்பாற்றினர்; எண்ணுதற்கு ஆக்க அரிது - (இச்செயல்) நினைத்துப்
பார்ப்பதற்கும் செய்தவற்கும் அரியதேயாம்.
வேள்வி எண்ணுதற்கு ஆக்கரிது என்றும் பொருள் கொள்வர்.
விண்ணவர்: தேவர். அவர் பொருட்டுச் செய்ததாதலின் ‘’விண்ணவர்க்
காக்கிய வேள்வி’’ என்றார். மைந்தர்: புத்திரர். மண்: பூமி. இராம.
இலக்குவர்களின் காவலின் வேள்வி ஆறு நாட்கள் நடந்தது என்பது
கருத்து. 40
