வேள்விப் படலம் - 457

bookmark

சித்தாச்சிரமத்தின் பெருமை

457.

‘ஆதலால். அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு.
ஈது அலாது இல்லை. வேறு இருக்கற்பாலதே.
 
அருவினை  அறுக்கும் ஆரிய  -  உயிர்களைப் பற்றி  வருத்தும்
அரிய    வினைகளை   அழித்துக்  காக்கும்  மேலோனே!;  காதலால்
கண்டவர்   -  (இந்தத்  தூய்மையான  இடத்தை)  காதல்   கொண்டு
காண்பவர்கள்;   பிறவி    காண்குறார்    -    பிறவி    நோயைக்
காணமாட்டார்கள்; ஆதலால். வேதநூல் முறைமையால் - ஆதலாலே.
வேதநூல்களில்   கூறியமுறைப்படி;   வேள்வி    முற்றுவேற்கு   - 
வேள்வியை   நடத்த    நினைத்திருக்கும்  எனக்கு;  இருக்கற்பாலது
-   வீற்றிருந்து செய்யத்தக்க  இடம்; ஈது  அலாது  வேறு  இல்லை
-  இவ்விடம் அல்லாது வேறில்லை.

ஈது  அலாது  வேறு  இல்லை.  இவ்விடம்  அல்லாது  வேறில்லை.
‘ஆதலால்   அருவினை  அறுக்கும்’ என்று  கொண்டு. திருமால் இருந்த
இடமாதலால்  தீவினைகளை  அழிக்கவல்லதிது   எனக் கூறினும்  ஆம்
‘அருவினை’   கடத்தற்கரிய  வினைகளாம்.   காதல்:  அன்பு   (பக்தி).
வேதநூல்:   வேதமும்  நூல்களும்  (உம்மைத்   தொகை).   முற்றுதல்:
நிறைவேறச்   செய்தல்.   முற்றுவேன்:    வினையாலணையும்   பெயர்.
இருக்கல்:  இருத்தல்.  பால்:  தன்மை.  ஏ:   அசை.  வேள்வி:  யாகம்.
வேள்வி  செய்ய  ஏற்ற  இடமிதுவே என  முனிவன்  கூறினானென்பது
கருத்து.