வெடிகுண்டு

bookmark

"கல்யாண வீட்டில பத்திரிகையை வைத்துக்கொண்டு யாரைத் தேடிக்கிட்டிருக்கீங்க...?"

"இந்தக் கல்யாணப் பத்திரிகையில தங்கள் நல்வரவை விரும்பும்...ன்னு நாற்பது பேரைப் போட்டிருக்காங்களே... அவங்களத்தான் தேடிக்கிட்டிருக்கேன்."

போலீஸ்: என்னய்யா அநியாயம். சொந்த வீட்டுக்கே வெடிகுண்டு வைத்திருக்கிறாயே? 

குற்றவாளி: என் மாமியாரும், மாமனாரும் வந்து ஆறு மாதம் ஆகுது. வேற என்ன செய்ய?

"சார்.... உங்க கட்சிக்கு மேடைப் பேச்சாளர் தேவைன்னு கேள்விப்பட்டேன். நான் நல்லா பேசுவேன் சார்!"

"அப்படின்னா நிமிஷத்துக்கு எத்தனை கெட்ட வார்த்தைகள் யூஸ் பண்ணுவே....?"

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?

கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்..ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்!

"உங்க பையனை யாரைப் பார்த்தாலும் கால்ல விழுந்துக் கும்பிடுறாப் போல வளர்த்திருக்கீங்களே. ஏன் ரொம்ப பணிவா இருக்கணும்னா?"

"அதெல்லாம் இல்லீங்க. எதிர் காலத்துல பெரிய அரசியல்வாதியா வரணும்னுதான்!"