விவேகானந்தர் கலைவாணியிடம் இருந்து பெற்ற அருள்

விவேகானந்தர் கலைவாணியிடம் இருந்து பெற்ற அருள்

bookmark

சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு சுவாமிஜி அமெரிக்காவின் பல நகரங்களில் சத்திய முழக்கம் செய்தவண்ணம் இருந்தார். பாரதத்தின் தர்மத்தை அவர்களுக்கு விளக்கியுரைத்தார். அவர் எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை. ஆயினும் சில மதப் பித்தர்கள் சுவாமிஜியை பலவாறு தூற்றவும் செய்தார்கள்.

அப்போது ஒரு நாள் டெட்ராய்டு நகரத்தில் சுவாமிஜி தங்கி இருந்த சமயம், அங்கு நடைபெற்ற ஒரு மத பிரசார இயக்கக் கூட்டத்தில் சுவாமிஜிக்கு எதிராக ஒரு சிலர் பேசினார்கள். சுவாமிஜி, அவர்கள் அனைவரும் அடங்கி ஒடுங்குவது போல சிம்மம் எனக் கர்ஜித்து வாதங்களை முன் வைத்தார். எவரும் அக்கணம் அவரை எதிர்த்துப் பேச இயலவில்லை.

டெட்ராய்டு நகரம் முழுவதும் சுவாமிஜியின் புகழ் பரவியது. அதனைக் கண்டு சிலர் நெஞ்சில் வஞ்சம் கொண்டனர். ஆயினும் சுவாமிஜியைப் பாராட்டுவது போல நடித்தார்கள்.

தங்களது பொய்யான "அன்பைக்" காட்டுவதற்காக அவர்கள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது அந்நாளில் சுவமிஜியே அதற்கு முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

எல்லோரும் அமர்ந்து கொண்டனர். உணவு வகைகள் பரிமாறப்பட்டன. சுவாமிஜி காப்பிக் கோப்பையைக் கையில் எடுத்தார். அதைப் பருக முயன்ற போது அவர் கண் முன்னே அவரது குருதேவர் தோன்றி "குழந்தாய் இதனைப் பருக வேண்டாம். அது விஷம் கலந்த பானம்" என்று எச்சரித்து மறைந்தார்.

குருதேவரின் அந்த பரிவுக் குரலை கேட்டு உணர்ந்தவராக சுவாமிஜி காப்பிக் கோப்பையை கீழே வைத்தார். தம் முன்னாள் நடித்தவர்களிடம் அவரும் நாடகமாடி விட்டு எழுந்து சென்றார்.

அக்கணம் குருதேவரின் அருள் சுவாமிஜியைக் காப்பாற்றியது.