விராதனுக்கு மோட்சம் அளித்தல்
விராதன் முற்பிறவியில் தும்புரு எனும் கந்தர்வர் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் தண்டகாரண்யம் காட்டில் திரிந்தது வாழ்ந்து, இராமாவதாரத்தின் போது இராமன் கையால் இறந்து, சாபவிமோசனம் பெறும் தன்மை இவனுக்கு இருந்தது. சீதையுடன் இராம – இலக்குமணர்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்திருந்த போது விராதன், சீதையை கவர்ந்து சென்றான். இதனை கண்ட இராம -இலக்குமணர்கள் விராதனின் இரண்டு கைகளை வெட்டி, பெரிய குழி வெட்டி உயிருடன் புதைத்தனர்.
