வாஸ்கோடகாமா

bookmark

டீச்சர்: வாஸ்கோடகாமா யாருன்னு தெரியுமா?
பையன்: தெரியாது...
டீச்சர்: முதல படிப்புல கவனம் செலுத்து
பையன்: பரிமளா ஆண்டி யாருன்னு தெரியுமா? 
டீச்சர்: தெரியாது...
பையன்: மொதல உன் புருஷன் மேல கவனம் செலுத்து...

"நம்ம கூட்டணியிலிருந்து எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே?"

"நம்பிக்கைத் துரோகின்னு பேசுங்க."

"அவர் திரும்ப நாளைக்கே நம்ம பக்கம் வந்துட்டா...?"

"நம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்."

"நான் ரிடையர் ஆன பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்.."

"ஏன் அப்படி..?"

"பின், ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு."

"எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா, திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்"

"என்ன சொல்ற நீ?!"

"நான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுக்கிட்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்.. உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்."

"உங்க நாயை அடக்கி வையுங்க. என் பெண் பாட ஆரம்பித்ததும் அது குறைக்க தொடங்கிவிடுகிறது."

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் பெண்தானே முதலில் ஆரம்பிக்கிறாள்?"