வனம் புகு படலம் - 2103
2103.
‘ “அடி இணை பொறைகல்லா”
என்றுகொல், அதர் எங்கும்,
இடை இடை மலர் சிந்தும்
இன மரம்? - இவை காணாய்!
கொடியினொடு இள வாசக்
கொம்புகள், குயிலே! உன்
துடி புரை இடை நாணித்
துவள்வன - அவை காணாய்!
குயிலே!- குறில் போன்ற குரல் உடையாளே!; இனமரம்-
கூட்டமானமரங்கள்; ‘அடி இணை பொறைகல்லா’ என்று கொல்-
(உன்) கால்கள் காட்டு வழியில்நடத்தலைப் பொறுக்கமாட்டா என்று கருதிப்
போலும்; அதர் எங்கும் இடை இடை -வழியிடைகளில்எல்லாம்;
மலர்களைச் சிதறும்; இவை காணாய் -; கொடியினொடுஇள வாசக்
கொம்புகள்- கொடிகளோடு இளைய மலர்மணம் வீசும் பூங்கொம்புகள்;
உன் துடி புரை இடை நாணி - உன்னுடையதுடிநடுவை ஒத்தஇடையைக்
கண்டு வெட்கம் உற்று; துவள்வன - ஒசிந்து அசைவன; அவை
காணாய் -.
சீதையின் பாதங்கள் கல்லுறுத்தலினால் தாங்கமாட்டா என்று மரங்கள்
வழியிடை மலர்சிந்துவதாகவும் - சீதையின் இடை கண்டு நாணிக் கொடிக்
கொம்பு துவள்வதாகவும் கூறியதுதற்குறிப்பேற்றம். இவையிரண்டும்
இயல்பாகக் காட்டில் நிகழும் நிகழ்ச்சிகளாம். கொடி,பூங்கொம்பு தனித்தனி
இடைக்கு உவமையாம். துடி - உடுக்கை. 16
