ரீங்காரச் சென்னை

bookmark

"எது எதுக்குத்தான் விளம்பரம் கொடுக்கிறதுங்கற ஒரு முறையே இல்லாமல் போச்சு!"

"எதுக்கு விளம்பரம் கொடுத்திருக்காங்க...?"

"ஒருத்தர் 'சின்ன வீடு' வேணுமின்னு விளம்பரம் கொடுத்திருக்கார்...!"

"நேற்று இண்டர்வியூவிற்குப் போய் தூங்கி விட்டேன்."

"அப்புறம்...?"

"நான்தான் கிளார்க்குன்னு நினைத்து நிறையப் பேர் கவரைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள்."

"நம்ம ஆளு கொத்தனாரோட எங்கே போறாரு?"

"ஓசோன் படலத்திலே ஓட்டை விழுந்திருக்கறதாச் சொல்றாங்க இல்லியா, அதை அடைக்கத்தான்."

"சிங்காரச் சென்னைங்கற பெயரை ரீங்காரச் சென்னைன்னு மாத்தணும்னு அவங்க போராட்டம் நடத்தறாங்களே ஏன்?"

"சென்னை முழுக்க கொசுத்தொல்லை அதிகமா இருக்கற காரணத்தினாலேதான்."

"என்ன கல்யாணப் பெண்ணோட கழுத்து, காது, கையிலேயெல்லாம் பூவைச் சுத்தி அனுப்பியிருக்காங்க?"

"பொன்னு வைக்கற இடத்திலே பூ வச்சாப் போதும்னு சம்பந்திங்க சொல்லி இருந்தாங்களாம்."