ராகிங்

bookmark

"அம்மா.. அப்பா ஏன் ஞாயிற்றுக்கிழமையில ஆஃபீஸ் ஃபைல வீட்டுக்கு கொண்டு வரார்?"

"ஆஃபீஸ் ஃபைல்களைப் பார்த்தால் தான் உங்கப்பாவிற்கு தூக்கம் வருமாம்.. அதுதான்.."

"விமானம், ராக்கெட்டைப் பார்த்து, நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது."

"ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.........."

"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!" 

"பெண் அவ்வளவு அழகா?" 

"இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"

எமன்: அங்கே என்ன சத்தம்.. சித்திரகுப்தா ..?

சித்திரகுப்தன்: புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் 'ராகிங்' செய்கிறார்கள் பிரபு..!!!

"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"

"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"