யான் சமீன்
யான் சமீன் (Jiang Zemin) சீனாவின் முக்கிய தலைவர்களின் ஒருவர். சீனப் பொதுவுடமைக் கட்சியின் மூன்றாம் தலைமுறைத் தலைவர். இவர் சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளாராக 1989 இருந்து 2002 பணிபுரிந்தார். சீனாவின் ஜனாதிபதியாக 1993 இருந்து 2003 வரை பணியாற்றினார். சீனாவின் நடுவண் படைத்துறை ஆணையத்தின் தலைவராக 1989 இருந்து 2004 வரை பணியாற்றினார்.
1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அப்போதைய தலைவரான Zhao Ziyang இறுக்கமாக கையாளவில்லை என விலக்கப்பட்டர். அவருக்கு மாற்றாக யான் சமீன் தலமையை ஏற்றார். இவரது தலைமையின் கீழ் சீனாவில் பாரிய பொருளாதார சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. ஹொங்கொங் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்கு சுமூகமாக கைமாறியது.
முதலாளித்துவ கொள்கைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்தினார். இவர் சட்டதுக்கு ஏற்ப தனியார் சம்பாதித்த சொத்துக்களின் உரிமைகளை உறுதி செய்தார். மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அரசமைப்புச் சட்டத்தில் எழுதி வைத்தார். மொத்தத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர்.
