மொட்டை மாடி

bookmark

1. "நான்கு மாடி கட்டிடத்தில் போய், மேல் மாடியில் மட்டும் ஏன் சந்தனக் கலர் பெயின்ட் அடிச்சிருக்காங்க?" 

"அது "மொட்டை" மாடியாச்சே!"

சி.ரகுபதி

2. "கபாலி, உன் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கா?"

"சார் சார்.... அதுக்கு "எட்டு" போடத் தெரியாது!"

வீ.விஷ்ணுகுமார்

3. "அந்த ஆளு செருப்புத் திருடி மாட்டிக்கிட்டாரு..."

"எங்க?"

"கால்ல தான்!"

வி.சாரதி டேச்சு

4. "எதுக்கு பிராந்தியை ஊதி ஊதிக் குடிக்கிறே?"

"அது "ஹாட்" டிரிங்க்ஸ் ஆச்சே...."

ஜே.தனலட்சுமி

5. "என்ன இந்த டாக்டர் கிலோ கணக்குல மருந்துகளை எழுதிக் கொடுத்திருக்காரு..?"

"இவர் "கிலோபதி" ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே!"