மையும் டீயும்

bookmark

"தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா.... ஏன்?" 
"இப்ப எல்லாம் கட்சி ஊர்வலத்துக்கு வர்றவங்களுக்கு, குவார்ட்டருக்கு பதிலா டானிக் தர்றாரு...!"

"ஏன்யா.... பேருந்தில் இருந்து கீழே குதிச்சுக் காலை ஒடிச்சிக்கிட்டே?" 
"ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாதுன்னு எழுதி வச்சிருக்காங்களே...? அதான் குதிச்சேன்!"

"கந்து வட்டிக்குப் பணம் வாங்கி என்னடீ செய்யுறே?" 
"தினம் உண்டியலில் பணம் சேர்க்கிறேன்!"

"எதுக்காக உங்க அப்பாவை இரண்டாந்தாரம் கலியாணம் பண்ணச் சொல்லி சண்டை போடுறே?"
"பழைய தாவணி சுடிதார் எல்லாம் போடுறதுக்குத் தங்கச்சிகள் நிறைய வேண்டியிருக்கே!"

"எழுத்தாளரைக் கட்டிக்கிட்டது பெரிய தொல்லையாப் போச்சு!" "ஏன்? என்ன செய்யுறாரு?" 
"மையும் டீயும் கொண்டு போய் வச்சா.... மையைக் குடிச்சிட்டு டீயைப் பேனாவிலே ஊத்துறாரு!"