மேட்டூர் நீர் மட்டம்

bookmark

ஒருவர்: ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?

மற்றொருவர்: தெரியாதே!

ஒருவர்: அட..இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு..! ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்!

"என்னது.. அந்த கிரிக்கெட் வீரர் சொந்தமா வாத்துப் பண்ணை வைக்கப்போறாரா..?"

"ஆமா.. இதுவரைக்கும் ஏகப்பட்ட 'DUCK' வாங்கியிருக்காராமே!"

"மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைகாரங்களுக்கு என்ன கோபமா?"

"ஏன்?"

"மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!"

"நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?"

"ஆமா, ஆன்ட்டி..."

"முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்."

"உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"

மகன்: அப்பா, காருக்கு முன்னாலே ஏம்ப்பா, 'எல்'ன்னு போர்டு தொங்க விட்டிருக்காங்க?

தந்தை: அது 'பேங்க் லோன்'லே வாங்கின வண்டியா இருக்கும்.