மிதிலைக் காட்சிப் படலம் - 701
சதானந்தர் குமாரர்களை வாழ்த்திச் செல்லல்
701.
என்று கோதமன் காதலன் கூறிட.
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா.
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை. ஏத்திப் பெயர்ந்தனன். தன் இடம்.
என்று கோதமன் - என்று (இவ்வாறு) கௌதம முனிவனுடைய;
காதலன் கூறிட - மைந்தனாகிய சதானந்த முனிவர் சொல்ல;
வென்றி வீரர்- வெற்றி வீரர்களாகிய இராமலக்குவர்; வியப்பொடு -
அதியத்தோடு (கேட்டு); உவந்து எழா - மகிழ்ச்சியடைந்து எழுந்து;
ஒன்றும் மாதவன் - பெருமை பொருந்திய தவத்தோனான
அம்முனிவரின்; தாள் தொழுது - அடிகளில் விழுந்து வணங்கி;
ஓங்கிய பின்றை - (எழுந்த) பின்பு; ஏத்தி - அச் சதானந்த முனிவன்
(அக் குமாராக்ளை) - வாழ்த்திவிட்டு; தன் இடம் பெயர்ந்தனன் -
தன் இடத்திற்குப் போனான். 138
