மிதிலைக் காட்சிப் படலம் - 694

bookmark

கோசிகன் தவக்கனலால் புகை விம்முதல் (694-695)

கலிவிருத்தம்
 
694.

‘எயில் எரித்தவன் யானை உரித்த நாள்.
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என.
புயல் விரித்து எழுந்தாலென. பூதலம்
குயிலுறுத்தி. கொழும் புகை விம்மவே.
    
எயில் எரித்தவன் -       திரிபுரத்தை   எரித்தவன்      சிவன்;
யானை உரித்த நாள்  -   யானையை    உரித்த  காலத்தில்;  பயில்
உறுத்தி - (உடலோடு)    செறியச்     செய்து;    உரி  போர்த்த -
அந்த  யானைத்   தோலை   மேலே போர்த்துக் கொண்ட;  நல்பண்பு
என -நல்ல  தன்மை   போலவும்;  புயல் - மேகங்கள்;    விரித்து
எழுந்தால் என -  எங்கும் பரவி  எழுந்தது     போலவும்;  பூதலம்
குயிலுறுத்தி - பூமி முழுவதையும்  நெருங்கச்  சய்து;       கொழும்
புகை - அந்த  மூலாக்கினியின  புகையானது; விம்ம - மிகுதியாக.  

புகை     எங்கும்  பரவுதல்: சிவன்  யானையை  உரித்து  அதன்
தோலைப்  போர்த்தது  போல  - பூமியில் எங்கும் கருமேகம் விரிந்து
எழுந்தது  போல இருந்தது எனல். எயில்: பட்டணத்தைக் குறிக்கும் -
ஆகுபெயர்.                                              131