மிதிலைக் காட்சிப் படலம் - 668
கோசிகன் தவத்தைச் சிதைக்குமாறு இந்திரன்
திலோத்தமையை ஏவுதல்
இந்திரன் அவனது தவத்தைக் கெடுத்தல்
668.
‘மாண்ட மா தவத்தோன் செய்த
வலனையே மனத்தின் எண்ணி.
பூண்ட மா தவத்தன் ஆகி
அரசர்கோன் பொலியும் நீர்மை
காண்டலும். அமரர் வேந்தன்
துணுக்குறு கருத்தினோடும்
தூண்டினன். அரம்பைமாருள்
திலோத்தமை எனும் சொல் மானை.
(இவ்வாறு) அரசர்கோன் - அரசர் தலைவனான கௌசிகன்;
மாண்ட மாதவத்தோன் - மாட்சிமை பெற்ற மாதவத்தனான வசிட்டன்;
செய்த வலனையே - பெற்ற வெற்றிச்செயலையே; மனத்தின் எண்ணி
- மனத்திலே இடைவிடாது சிந்தித்து;- பூண்ட மா தவத்தன் ஆகி -
மேற்கொண்ட பெருந்தவம் புரிந்தவனாய்; பொலியும் - திகழும்;
நீர்மை - தன்மையை; காண்டலும் - நோக்கிய அளவில்;
அமரர்வேந்தன் - தேவர் தலைவனான இந்திரன்; துணுக்கு உறு
- அச்சம் மிகுந்த; கருத்தினோடும் - கருத்தோடு; அரம்பை மாருள்
- அரம்பை முதலிய தெய்வப் பெண்களுள்; திலோத்தமை எனும் -
திலோத்தமை என்ற; சொல் மானை - புகழ்கொண்ட மான் போன்ற
பெண்ணை; தூண்டினான் - (அக் கௌகினன் தவத்தைக் கலைக்கும்
பொருட்டு) ஏவினான்.
சொல்: புகழ். இந்திரன் துணுக்குற்றதன் காரணம் பெருந்தவம்
செய்பவரின் கபாலத்திலிருந்து ஒருவகை நெருப்பு மேல் எழுந்த தன்
பொன்னுலகைச் சுட்டெரிக்கும் என்கிற அச்சம். மாண்ட - மாண்
என்ற வினைமுதல் அடியாக வந்த பெயரெச்சம். ‘மாண்ட
என்மனைவியொடு மக்களும் நிரம்பினர்’ (புறம்.191). 105
