மாட்டின் மேல் ஏறிய ரயில்

bookmark

பசு மாடு ஒன்று ரயில் வண்டி ஏறி அங்கேயே இறந்து விட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது.
அங்கு வந்திருந்த ரயில்வே வழக்கறிஞர். ரயில் ஏறி இறந்த மாடு விலை உயர்ந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதன் உரிமையாளரும் ஏழைதான். அவருக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பிற்காக வருந்துகிறேன்.
ஆனால் ஓர் உண்மையை எதிரியாகிய இவர் புரிந்து கொள்ள வேண்டும். அவர் மாடு ரயில்வே தண்டவாளத்திற்கு வர வேண்டிய வேலையை இல்லை. அந்த இடம் எங்களின் தனிப்பட்ட சொத்து. அந்த மாடு அத்து மீறி நுழைந்து உள்ளது. அதனால் எங்கள் நிலத்தை அது ஆக்கிரமித்தது ஆகிறது. சட்டப்படி சொன்னால் அந்த மாட்டிற்கு உரியவராகிய இவரும் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தவர் ஆகிறார்.
ஆனால் நாங்கள் இந்த வழக்கை இங்கே கொண்டு வந்து நீதிபதி அவர்களைத் தொல்லைப்படுத்த விரும்பவில்லை. அவருடன் சமாதானமாகவே போக விரும்புகிறோம் நஷ்ட ஈடு எவ்வளவு தொகை என்பதை அவர்தான் சொல்ல வேண்டும், என்று கூறி விட்டு அமர்ந்தார்.
நீதிபதி அவர்களே! ஏழையாகிய என்னால் அவர்களுக்கு நூறு ரூபாய்தான் நஷ்ட ஈடாகத் தர முடியும், என்றான் உழவன்.