மனித நேயம்
"டாக்டரும், பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன்?"
"ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம்!"
கணவன்: எனக்கு டைவர்ஸ் வேணும். என் மனைவி ஆறு மாசமா என்னிடம் பேசவில்லை.
வழக்கறிஞர்: திரும்பத் திரும்ப நல்லா சிந்துச்சுக்கங்க. அப்படிப்பட்ட மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.
"என்ன மேடம் எங்களுக்கு ஒதுக்கின தொகுதிகள்ல உங்க கட்சி வேட்பாளரை நிற்க வைக்கிறீங்க, இதுதான் கூட்டணி தர்மமா?"
'வார்த்தைய கொட்டாதீங்க' எங்க ஆளுங்க நின்னா என்ன? தொகுதி இப்பவும் உங்களதுதான"
பிச்சைக்காரன் 1: அதோ உண்டியல் குலுக்கிக்கிட்டுப் போறாரே கட்சித்தலைவர். அவரும் நம்மளப் போலத்தான்.
பிச்சைக்காரன் 2: எப்படி சொல்றே...
பிச்சைக்காரன் 1: அவருக்கு வசதி இருந்தும் பிச்சை எடுக்கிறாரு, நாம வசதியில்லாம பிச்சை எடுக்கிறோம்.
"அந்த நடிகை ரொம்ப மனித நேயம் உள்ளவருன்னு எப்படிச் சொல்றே?"
"தன்னோட முன்னாள் கணவர்களுக்கு மாதாமாதம் கருணைத் தொகை அனுப்புறாங்களே!"
