ப்ளூஹெட் வ்ரேசஸ்
ப்ளூஹெட் வ்ரேசஸ்
நீல நிறத்தில் தலையை கொண்டவை ஆண் மீன்கள், மஞ்சள் நிறத்தில் தலையை கொண்டவை பெண் மீன்கள். ஆண் மீன்கள் பெரும்பாலும் பெண் மீன்களை பாதுகாக்கும் பண்புகள் கொண்டவை.
கூட்டத்தை பாதுகாக்கும் ஆண் மீன் கூட்டத்திலிருந்து நீங்கி விட்டாலோ அல்லது இறந்து விட்டாலோ, அந்த கூட்டதிலிருக்கும் மற்றொரு பெரிய பெண் மீன், ஆணாக மாறி கூட்டத்தை பாதுகாக்க தொடங்கி விடும்.
பாலினம் மாறிய அந்த மீனுக்கு கருப்பை உறுப்பு விந்தகமாக மாறி, உயிரணுக்களும் சுரக்க ஆரம்பித்து விடுகிறது.
அதாவது ப்ளூஹெட் வ்ரேசஸ் மீனுக்குள்ளயே பெண் உறுப்புகளும் ஆண் உறுப்புகளும் இருக்குமாம். ஆண் மீன்கள் தங்களை விட்டு போகும் நேரங்களில், பெண் மீன்களின் உடலுக்குள் இயற்கையாகவே பெண் உறுப்புகளின் செயல்பாடு தடைசெய்யப்பட்டு பின் ஆண் உறுப்புகளின் செயல்பாடு தொடங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அதன் பண்புகள், நிறம் அனைத்தும் சில மணி நேரங்களில் மாறிவிடுகிறது.
குஞ்சு பொரிக்கும் போது அனைத்து குஞ்சுகளும் பெண்களாக தான் பொரிக்கின்றன.
மேலும் இந்த மீன்களில் மிக சுவாரஸ்யமான மற்றொரு விஷயம் என்னவென்றால் சிறிய மீன்கள் பெரிய ஆண் மீன்களை விட அதிக விந்தணுக்களை வெளியிடுகின்றன.
