ப்ளட் டெஸ்ட்

bookmark

பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன். 

டாக்டர்: எப்போ நடந்தது?

பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.

டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?

பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.

"எதுக்கு ரத்த சம்பந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கறே?"

"நாளைக்கு எனக்கு ப்ளட் டெஸ்ட்!!!!!!!"

"எங்கப்பா அம்மா சொன்ன பேச்சை நான் சின்ன வயசிலிருந்தே கடைப்பிடிச்சுட்டு வரேன்!"

"அப்படியா..! சின்ன வயசுல என்ன சொன்னாங்க?"

" 'நீ உருப்படவே மாட்டே'ன்னாங்க!"

"மாப்பிள்ளை ரொம்பக் கறுப்போ?"

"ஏன்?"

"வெளுப்பா தெரியறதுக்கு நெகடிவ் அனுப்பி வெச்சிருக்காரே!"

கீதா: ஏன்டி.. டிவியில மழை விட்டு விட்டு பெய்யும்னு சொல்றாங்களே... ஏன் தொடர்ந்து பெய்யாதா?

சுதா: வானத்துல மழைத் தண்ணி கம்மியா இருக்காம். அதான் நம்ம ஊர்ல கரண்ட் விட்டு விட்டு வர்ற மாதிரி மழையையும் விட்டு விட்டு விடறாங்க இந்த கவர்மென்ட்டு.