போஸ்ட்மார்ட்டம்

bookmark

"ஜெயிலில் தொழில் கற்றுத் தருவாங்களாமே... நீங்க ஜெயிலில் என்ன கத்துக்கிட்டீங்க?"

"குற்றத்திலிருந்து எப்படித் தப்பிக்கறதுன்னு கத்துக்கிட்டேன்."

மனைவி: எதிர் வீட்டு வயசான அம்மாவோட ஏன் காரணமில்லாமே அடிக்கடி சண்டை போடறே?.

கணவன்: அவங்க பார்க்கறதுக்கு அசப்பிலே உங்க அம்மா மாதிரியே இருக்காங்க.

"ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து வெளியே வந்த டாக்டர், ஏன் 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்'னு சொல்றார்?"

"ஆபரேஷனோடு சேர்த்து போஸ்ட்மார்ட்டமும் முடிச்சுட்டாராம்!"

"யோவ்... என் சுயசரிதை சூப்பரா சேல்ஸ் ஆகுதாமே!"

"ஆமாம் தலைவரே... ஒரு நல்ல தலைவர் எப்படி இருக்கக்கூடாதுன்னு தெரிஞ்சுக்க ஆளாளுக்கு வாங்கறாங்களாம்!"

"நம்ம பாலன் ரொம்ப நல்லவரு.... அவரை எம்.எல்.ஏ. ஆக்கிடுவோம்."

"வேண்டாம் வேற ஆளைப் பாருங்க..... பாவம்! அவரு நல்லவராகவே இருந்திட்டுப் போகட்டும்."