போலி கணவர்
ஆரம்பத்துலே படத்துக்கு பத்துக்கோடிதானே பட்ஜெட் சொன்னீங்க, இப்போ இருபதுன்னு சொன்னா எப்படி? எதற்கு?"
"ஒருவேளை படம் ஓடாட்டி படத்தை வாங்கினவங்களுக்கு திருப்பிக் கொடுக்கறதுக்காகதான் பட்ஜெட்டுல ரீஃபண்ட் திட்டம்
வச்சிருக்கோம்!"
"கொள்ளை போன நகைக் கடைக்குக் கீழே ஒரு சுரங்கப்பாதை இருக்கறதை கண்டுபிடிச்சிருக்கோம் சார்..."
"வெரிகுட்... அது எந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் முடியுதுன்னு பாருங்க!"
"வேலை எல்லாம் முடிச்சிட்டுப் போன உங்க வீட்டு வேலைக்காரி, திடீர்னு திரும்பவும் வந்துட்டுப் போறாளே... ஏன்?"
"பக்கத்து வீட்டைப் பத்தி ஏதாவது ஃபிளாஷ் நியூஸ் இருக்கும்...."
வக்கீல்: "உங்க கணவரை டைவர்ஸ் பண்ண என்ன காரணம் சொல்லப்போறீங்க மேடம்!"
கிளையண்ட்: "போலி கணவர்னு கேஸ் போட்டா கேட்சிங்கா இருக்குமே!"
"கபாலி திரும்பவும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறானாம் ஏட்டய்யா..."
"அவன்கிட்ட வாங்கற மாமூல் பணம், அவனுக்கு மொய் வைக்கவே சரியாப் போயிடும் போலிருக்கே...!"
