போர்
1. "போர்வீரன் "கெட்டப்"பில் என் சிலையை யதார்த்தமாக வடிக்க வேண்டும் என்று சிற்பியிடம் சொன்னது தப்பாகிவிட்டது!"
"ஏன் மன்னா?"
"நான் தலைதெறிக்க ஓடுவது போலல்லவா சிலை செய்திருக்கிறார்!"
ஆர்.ஆர்.தமன்.
2. "சாதித்துவிட்டீர்கள் மன்னா...."
"என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே..."
"போரிலிருந்து கடந்தமுறை ஓடிவந்ததைவிட இந்தமுறை, இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே அரண்மனைக்கு வந்து சேர்ந்துவிட்டீர்கள் மன்னா!"
ப்ரியதர்ஷன்.
3. "மன்னரின் போர்க்கால அனுபவங்களைத் தொகுத்து படமெடுக்கப் போகிறார்களாம்!"
"படத்தின் பெயர்?"
"வலியின் ஓசை!"
வீ. விஷ்ணுகுமார்
4. "தசாவதாரம் பார்த்த பின்பு மன்னருக்கு ஒரே ஆசையாம்!"
"கமல் மாதிரி கெட்டப்புல வரணும்னா..?"
"ம்...ஹூம்.. மல்லிகா ஷெராவத்தை வச்சு அரண்மனையில் ஒரு குத்தாட்டம் போடணும்னு...!"
