பொருளடக்கம்.
I. EARLY HISTORY
Ancient India: aborigines during the stone age and the subsequent age: the Dravidian inroad: the Nagas: the Tamils: the ancient state of the Tamils: the Tamils settle themselves in India: the coming of the Turanians (Mongolians, the yellow men of India): the intermixer of Turanians and Tamil elements; the Tamil language: its dialects: the relation of Tamil to the Turanian family of languages: the state of civilisation of the Tamils: the migration of the Tamils: the coming of the Aryans; the origin of the Tamil Alphabet; Tamil and Sanskrit; Sanskrit influence over the Tamil dialects.
I. ஆதி வரலாறு.
பண்டை இந்தியா; கற்கால மனிதர்; உலோககாலமனிதர்கள்; பிறர்வருகை; நாகர்கள்; தமிழர்; தமிழரது பண்டை நிலைமை; தமிழர் குடியேற்றம்; துரானியர் வருகை; துரானியர் கலப்பு; தமிழ்மொழி; தமிழின் வழிமொழிகள்; தமிழ் துரானிய பாஷையன்று; தமிழரின் நாகரிக நிலை; தமிழர் பரவுதல்; ஆரியர் வருகை; தமிழ் நெடுங்கணக்கு உற்பத்தி; வடமொழி தென்மொழி; தமிழின் வழிமொழிகள் திருந்தினமை.
---------------------------
II THE INFLUENCE OF SANSKRIT.
The nature of the Aryans: Sanskrit only a dead language; accession of Sanskrit words in TAmil; Sanskrit borrowed hardly any Tamil words; Sanskrit words adapted in Tamil; the rise of Buddhism; Tamil high and low; the rise of Jainism; Bilingualism; the prepon- derance of the Sanskrit element; Doublets; Tamil grammar modified; Sanskrit and Tamil grammars organically different; the independence of the Tamil language; the defects of Sanskrit; Tamil Prosody: how far Tamil is indebted to Sanskrit; the opinion of the authour of the Prayoga Viveka.
II. வடமொழிக்கலப்பு.
ஆரியரியல்பு; வடமொழியின் எட்டு வழக்குநிலை; வட சொற்கள் தமிழிற் புகவும் தமிழ்சொற்கள் வடமொழியிற் புகாமை; வடசொற்கள் திரிந்து வழங்கப் பட்டமை; பௌத்தரெழுகை; செந்தமிழ் கொடுந்தமிழ்; சைனரெழுகை; மணிப் பிரவாள நடை; வடசொன் மிகுதல்; இரட்டைப்பதம்; தமிழிலக்கணந்திரிதல்; வடமொழி யிலக்கணமுந் தமிழ்மொழி யிலக்கணமும் வேறாமாறு; தமிழ்மொழியின் தனிநிலை; வடமொழியின் குறைவு; தமிழ் யாப்பு; வடமொழிக்குத் தமிழின் கடைமைப் பாடு; பிரயோக விவேகமுடையார் கூற்று.
---------------------------------------------
III THE THREEFOLD CLASSIFICATION.
The nature of Iyal Tamil; the region where high Tamil prevailed; where low Tamil prevailed; works in Iyal Tamil; the relation of Iyal Tamil and Natakam; the nature of Isai Tamil; works in Isai Tamil; the relation of Isai to Natakam; the origin of Nataka Tamil; Sanskrit influence in Isai Tamil; the scarcity of works in Isai Tamil; the nature of Nataka Tamil; the importance of Nataka Tamil; the paucity of Nataka Tamil; the extinction of works in Nataka Tamil; Nataka Tamil produces good effects; the revival of Nataka Tamil; the existence of Nataka Tamil anterior to the Aryan influence.
III. மூவகைப் பாகு பாடு.
இயற்றமிழினியல்பு; செந்தமிழ்நாடு; கொடுந்தமிழ்நாடு; இயற்றமிழ் நூல்கள்; இயற்றமிழ்க்கும் மற்றைத் தமிழ்கட்கு முள்ள இயைபு; இசைத்தமிழி னியல்பு; இசைத் தமிழ்நூல்கள்; இசைத்தமிழ்க்கும் நாடகத் தமிழுக்கு முள்ள யியைபு; நாடகத்தமிழின் தோற்றம்; நாடகவியலுடையார் கூற்று; இசைத் தமிழில் ஆரியக் கலப்பு; இசைத்தமிழ்நூல்கள் அருகினமை; நாடகத்தமிழினியல்பு; நாடகத்தமிழின் சிறப்பு; நாடகத்தமிழின் வீழ்நிலை; நாடகத்தமிழ்நூல்கள் இறந்து பட்டமை; நாடகத்தமிழால் நன்மைமிகுமென்பது; நாடகத்தமிழ் மீட்டுந்தலையெடுத்தல்; நாடகத்தமிழ் ஆரியர் கலக்குமுன்னரே தமிழரிடத் துண்டென்பது.
---------------------
IV THE FIVE PARTS OF GGRAMMAR
How language is formed; the constant change of language; the origin of grammar as a check to the variability of language; Agastyam; Tolkapyam; the three divisions of Tamil Grammar; Porul Ilakkanam included Prosody and Rhetoric; Prosody separated itself from Porul thence the fourfold divisions of Tamil Grammar; works of Prosody; want of study of Porul; Tamil Rheotirc improved by Sanskrit;works on Tamil Rheotoric; the fivefold division of Tamil Grammar completed; works treating of the fivefold division of Tamil Grammar; Pattiyal; metrical Smoersaults; the general decay of Pattiayl and metrical Somesaults.
IV. ஐவகை யிலக்கணம்.
பாஷையாக்கம்; பாஷையடிக்கடி மாறுபடுதல்; இலக்கணவரம்பு வகுத்தல்; அகத்தியம்; தொல்காப்பியம்; மூவகை யிலக்கணம்; பொருளிலக்கணத்தில் யாப்பணிகளடங்குமாறு; யாப்புத் தனிப்படப் பிரிந்து நால்வகையிலக்கணமாயினமை; யாப்பிலக்கண நூல்கள்; பொருளிலக்கண விலக்கியநூல்கள்; அணியிலக்கணம் ஆரிய மொழியால் விருத்தியாதல்; அணியிலக்கண நூல்கள்; சித்திர மீமாஞ்சையுடையார் கூற்று; ஐவகையிலக்கணமும் முற்ற அமைந்தமை; ஐவகையிலக்கணமுங் கூறும் நூல்கள்; பாட்டியல்; மிறைக் கவிகள்; பாட்டியலும் மிறைக்கவிகளும் பெரும்பாலும் அறிவுடையோராற் பாராட்டப்படாமை.
------------------
V. THE ORIGIN AND THE ANTIQUITY OF THE LANGUAGE.
Natural language; sound as an instrument; the various ways in which words are formed; imitative, emotional, and symbolic; the tongue-help to gesture language; the decay of gesture language at the increase of tongue-help; pronominal roots; language a human product; the opinion of the ancient Tamils on the origin of Tamil language; how intelligibility was possible; what are ancient languages?; Tamil one of them; the opinion of Valmiki and Vyasa; when language originated; classical writers on antiquity of Tamil; Kumariland submerged; Haeckel's view.
V. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்.
இயற்கைப்பாஷை; ஒலிக்கருவி; மொழித்தோற்றவகைகள்; போறல்வகை; கலைவகை; அறிகுறிவகை; நாவின்சைகை கைச்சைகைகட்கு உதவியாயெழுந்தமை; நாவின் சைகை மேற்படக் கைச்சைகை வீழ்ந்துபடுதல்; தன்மை முன்னிலைப் பகுதி கள்; பாஷை மக்காளாக்கப் பொருளென்பது; தமிழ்ப்பாஷையின் தோற்றத்தைப் பற்றி முந்தையோர்கூற்று; பாஷை யாவருக்கும் ஒருங்கே விளங்கியவாறு; தொன்மொழிகள்; பிறர் தமிழின் தொன்மை மாட்சிகொண்டமை, வால்மீகி வியாச* முனிவர்கள் கூற்று; பாஷை தோன்றிய காலம்; பண்டைத் தமிழ்நூலாசிரியர்கள் கூற்று; கடல் கொள்ளப்பட்ட குமரிநாடு; மேற்புலவிஞ்ஞானி யொருவர் கூற்று.
VI. THE INDIVIDUALITY OF THE LANGUAGE.
Each language has an independent charecter; the offshoots of a language vary in charecter; Malayalam is a dialect of Tamil became independent; the tamil Alphabet and its defects; the short உ; the different ways of Tamil pronunciation; word formation; the parts of speech; the classification of gender and its defects; classifiaction of tense; the present tense; particles; tense classification to suit modern Tamil; a dialogue;studyof words; the Tamil's knowledge of mathematics; the richness of Tamil.
VI. பாஷையின் சிறப்பியல்பு.
ஒவ்வொரு பாஷையுந் தனித்தியங்கு மென்பது; தாய்மொழியும் வழிமொழியுந் தனிப்படு பெற்றியுடையன; தமிழும் மலையாளமும் வேறாமாறு; தமிழின் நெடுங்கணக்கு; அதன் குறைபாடு; குற்றியலுகரம்; உச்சாரணபேதங்கள்; பகுப்பிலக்கணம்; சொற்பாகுபாடு; பால்வகுப்பும் அதன் குறைவும்; காலப் பகுப்பு; நிகழ்கால விடைநிலை; பாஷை நடைக்கேற்ற காலப்பகுப்பு; எல்லாவற்றிற்குஞ் சொற்களுடைமை; ஒருசல்லாபம்; சொற்பொருளாராய்ச்சி; தமிழர் கணக்கறிவு; தமிழ்மொழியின் வாய்ப்புடைமை.
---------------
VII. CHANGES IN THE LANGUAGE.
The linguistic 'natuaral selection'; change of form in words due to negligencd, laziness and economy of time and effort; illaustrations; change of word forms due to distinctions and ease of pronunciation; illustations; change due to false analogy and desire for symmetry; decency and euphemism; chane due to political fluctuations; accession of Hindustani words in Tamil classics; diphthongal changes; change in long vowels; change due to commercial activities; the differentiation of ர and ற; the differentiation of ழ and ள; Virasoliyam and Kandapuranam on ழ and ள; the stages of language; Tamil in the agglutinative-inflectional stage; the rapidity of change; Generalisation; Specialisation; Amelioration; Deterioration; Suggestion Freemasonry in words; chane due to Rhetoric; the development of Grammar; change due to mistakes in metrical dictionaries; the impossibility of correcting them; the relation between grammar and literature.
VII.பாஷை வேறுபடுமாறு.
பேச்சுவழக்குள்ள பாஷைகள் சதா வேறுபடுமென்பது; 'இயற்கைப்பிரிநிலை' பாஷைநூலினுள் கொள்ளப்படுதல்; சொல் லுருவஞ் சிதைதல்; பொச்சாப்பு, சோம்பல், காலச்சுருக்கம், முயற்சிச்சுருக்கம் முதலிய காரணங்கள்; மரூஉ, உச்சரிப்புரலம் முதலிய காரணங்கள்; மொழியிறுதிப்போலி; போலியொப்புமை, அழகு விருப்பம் முதலிய காரணங்கள்; இலக்கணப்போலி; இடக்கரடக்கல்; மங்கலம்; இராஜ்ய மாறுபாட்டுக் காரணம்; இந்துஸ்தானிச் சொற்கள் இலக்கியங்களி லேறினமை; சந்தியக்கரங்கள்; நெட்டுயிர்களின் நிலைப்பேற்றுக்குறைவு; வாணிகக்காரணம்; ரகர றகரவேறுபாடு; ழகரளகரவேறுபாடு; வீரசோழியமுங் கந்தபுராணமும்; ழகர ளகரங்களை ஒருவகைப்படுத்திச் செய்கைசெய்தல்; பாஷைநிலைகள்; தமிழ் தொடர்நிலையினின்று உருபுநிலைக்கேகும் நிலையிலிருத்தல்; வேறுபாட்டின்விரைவு; ஏட்டுவழக்கும் பேச்சுவழக்கும் வேறுபடுதல்; பொதுப்படை நியமம்; சிறப்புப்படை நியமம்; பொருள் முற்றினும் வேறுபடுதல்; உயர்பொருட்பேறு; இழிபொருட்பேறு; குறிப்புச்சொற்கள்; குழூஉக்குறி; அணிவகையான் வேறுபடுதல்; இலக்கணத்தினியக்கம்; நிகண்டு செய்பிழை இலக்கிய மேறுதல்; அவற்றைத் திருத்தலாகாமை; இலக்கிய விலக்கணவியைபு.
----------------
VIII. THE RANGE OF THE LITERATURE
Civilisation enriches literaure; the dignity of laguage; periods of literature; Early period; befoe 100 A.D; mediaeval mperiod; I.A.D. 100 to A.D.600. II A.D.600 to A.D. 1400; modern period; 1400 A.D. upwards; a bird's eye view of the literature of the three periods.
VII. நூற்பரப்பு.
பாஷையின் நூற்பரப்பு நாகரிகவிருத்திக்குத் தக்கபடி வேறுபடுமென்பது; பாஷையின் கௌரவம்; காலப்பிரிவு; ஆதிகாலம் - கி.பி. 100 க்கு முற்பட்ட காலம்; இடைக்கால முற்பகுதி - கி.பி. 100 முதற் கி.பி. 600 வரையிலுள்ள காலம். இடைக்காலப் பிற்பகுதி - கி.பி. 600 முதற் கி.பி. 1400 வரையிலுள்ள காலம்; பிற்காலம் - கி.பி. 1400 முதல் இற்றைநாள் வரையிலுள்ள காலம்; இம்முக்காலத்து நூல்களின் இயல்பு.
-----------
IX THE REFORM OF LANGUAGE.
The slow adaptation of language to the growth of civilisation; the indispensability of reform; perspecuity of style; limitation of Sandhi; the adoption of punctuation; the introduction of foreign words.
IX. பாஷையின் சீர்திருத்தம்.
தமிழ்மொழியின் வளர்ச்சி நாகரிக வளர்ச்சிக்குத் தக அமையாமை; சீர்திருத்தம் இன்றியமையாமை; ஏட்டுவழக்குநடை தெளிவுபெற அமைதல்; சந்திபிரித்தெழுதுதல்; குறியீட்டிலக்கணம் மேற்கொள்ளல்; ஆங்கிலச் சொற்களை யமைத்துக் கொள்ளுமாறு; புதியன புகுமாறு.
X. CONCLUSION.
The study of Tamil necessary; the excellence of Tamil; is Tamil a classical language?; the school-Book Society and its work; the Madras Dravida-Bhasha Sangam; the Madurs New Tamil Academy and its work; The Tamil Societies adjoining English Colleges; the growth of a language is natural and unconscious; hence reforms not to be forced.
----
X.முடிவுரை.
தமிழ்ப்பயிற்சி அவசியமென்பது; தமிழ்ப்பாஷையின் ஏற்றம்; தமிழ் 'உயர் தனிச்செம்மொழி' யா வென்பது; பள்ளிக்கூட பாட நூற்சபையும் அதன் தொழிலும்; சென்னைத் திராவிட பாஷா சங்கம்; மதுரைப் புதுத் தமிழ்ச் சங்கமும் அது செய்தொழிலும்; ஆங்கிலக் கலாசாலைத் தமிழ்ச் சங்கங்கள்; பாஷை வேறுபடுவது தன்னியல்பாகவே யென்பது; புதியன புகுத்தல் இயலாதென்பது.
----------------
உ - சிவமயம்.
