பென்குயின்

பென்குயின்

bookmark

பென்குயின்

பறவையினத்தை சார்ந்த இந்த பறவைகளால் பறக்கமுடியாது. 

மிகவும் கடுமையான குளிர் பிரதேசங்களில் வசிக்கும் இவை மிகவும் சாதுவானவை.

தன் வாழ்நாளின் 75 சதவிதத்தை நீருக்கடியிலே உணவு தேடுவதற்காக கழித்துவிடும்.

இதன் உடல் அமைப்பு நன்கு நீந்துவதற்கு ஏதுவாக இருக்கும் இவை மணிக்கு சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும்.

இவைகளால் நீருக்கடியில் சுவாசிக்க முடியாது ஆனால் அதிக நேரம் மூச்சை அடக்கிகொள்ளும் திறனுடையது.

இவை நல்ல தண்ணீரைக் குடிக்காது. கடல் நீரை மட்டுமே குடிக்கும். இதன் உடலில் உள்ள ஒரு சுரப்பியின் மூலம் தண்ணீரில் உள்ள உப்பை பிரித்து தனியே வெளியேற்றிவிடும்.

இதன் உடல் முழுவதும் தண்ணீர் புகாத வாட்டர் புரூப் சிறகுகள் உள்ளன. கடும் குளிரையும், மழையையும் சமாளிக்க மூன்று அடுக்குச் சிறகுகள் இதன் உடம்பில் இருக்கும்.

இதன் உடம்பில் தினசரி 150 கிராம் சிறகுகள் வரை உதிர்ந்து விடும். ஆனால், 12 நாட்களில் புதுச்சிறகுகள் முளைத்து விடும். தன் உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு, கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும்.

கடலில் 200 மீட்டருக்குக் கீழ் சர்வசாதாரணமாக நீச்சல் அடிக்கும்.

ஐஸ் பாறைகளைக் கண்டு விட்டால், காலால் இவை நடக்காது. வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங் செய்யும். நிலத்தில் எதையும் சாப்பிடாது.

சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குயின்கள் பல நாட்களாக கரைக்குத் திரும்பாமல் நீந்தும்.

பொதுவாக இவை இரண்டு முட்டைகளை மட்டுமே இடும்.

உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் இவற்றால் முடியும்.

இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. 

காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. 

கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும்.