பெத்தலகேம் குடிலில் மரியின் மடியில்

bookmark

தவழும் என் பாலா எந்தன் இதயத்தில் நீ வாராய் (2)

1. ஏழ்மையை ஏற்று எளிமையில் வாழ்ந்திட
குடிலினில் நீ பிறந்தாய் நல் குழந்தையாய் நீ தவழ்ந்தாய் (2)
இந்த ஏழையின் இதயக் குடிலினில் தவழ
எழுந்து நீ வாராய் எழுந்து நீ வாராய்

2. பாவிகள் வாழ்வைப் பரிசுத்தமாக்கிட
பாரினில் நீ பிறந்தாய் பனிச்சாரலில் நீ மலர்ந்தாய் (2)
இந்த பாவியின் உள்ளக் குடிலினில் தவழ
எழுந்து நீ வாராய் எழுந்து நீ வாராய்