பூதேவியின் துதி

bookmark

பூதேவியின் துதி  தாமரை போன்ற திருவிழிகளையுடையவனே!சங்குசக்கரகதாதி திவ்விய ஆயுதமுள்ளவனே!உனக்குத்தெண்டன் சமர்ப்பிக்கிறேன்பூர்வத்தில் மகார்ணவத்தில் மூழ்கிக் கிடந்த என்னை நீயே உத்தரித்தாய். இப்போதும் அதுபோன்றே என்னை உத்தரித்தருள வேண்டும்.ஜனார்த்தனா! உன் மகத்தகங்கார தன்மாத்திரைகளும் பிரகிருதியும், சீவனும் யாவுமே உனது திருச்சரீரமல்லவோ! க்ஷத்திரக்கிய சொரூபனும், பரமாத்மாவும் சமஸ்த ஜகத் வியாபகனுமான உனக்கு நமஸ்காரம்! அவ்வியக்தமான பிரபஞ்சமும், காலமும் சொரூபமாகவுடைய உனக்கு நமஸ்காரம்! பிரம்ம ரூப, ஸ்வயரூப, ருத்திர ரூபமும் தரித்து சர்வ பூதங்களுக்கும் சிருஷ்டி கர்த்தாவாகவும், ரட்சகனாகாவும், சங்காரகனாகவும் இருந்து கல்பாந்த காலத்தில் சகல பூதங்களையும் கிரகித்து மூன்று லோகங்களையும் தண்ணீரானது பொங்கி அமிழ்த்தும் படிச்செய்து, பின்னர் அந்த மகா பிரளயத்திலேயே சயனம் செய்து, பரமயோகிகளாலே கோவிந்தா என்று தியானிக்கப்படுபவனும், நீயே அன்றே! பரமாத்பனும், திவ்வியனுமான உனது நிஜஸ்வரூபத்தை எவரே அறிவர்? நீ ஜகத்தை ரட்சிப்பதற்காக, லீலார்த்தமாக தரித்த உனது அவதாரங்களை யன்றே தேவர்களும் ஆராதிக்கிறார்கள்? மோட்சத்தை விரும்பும் மாமுனிவர்களும் பரம்பிரம்மமான உன்னையே ஆராதித்து முத்தராய் பரமானந்தத்தை அடைகின்றனர். யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதேயமும், தாரகனும் பிரகாசகனுமாகையால் ஸ்ரீவாசுதேவன் என்கின்ற திருநாமம் கொண்ட உன்னை ஆராதிக்காமல் எவன் தான் முக்தியடைவான்?மனதால் கிரகிக்கப்படுகின்ற சுகம் முதலானதும், கண் முதலிய இந்திரியங்களாலே கிரகிக்கத்தக்க ரூபாதிகளும் புத்தியினாலே பரிசோதிக்கும்படியான பிரமாணந்தரங்களும் உனது சொரூபங்களன்றே? தேவதேவா! உன்னிடத்திலே பிறந்து, உன்னையே ஆஸ்ரயித்து, உனது சரீர பூதையாய் உன்னிடத்திலேயே நிலைத்திருப்பவளாகையால் உலகங்கள் யாவும் என்னை மாதவி என்று சொல்லும் பலவிதமான கலைகளை உருவாக்கியவரே! வெற்றியின் நாயகனே!பிரபஞ்சத்தின் சொரூபனே! நீ வாழ்க!அளவில்லாமல் இருக்கக்கூடிய அனந்தன் என்ற திருநாமம் உடையவரே!யாவரும் கண்டு வியக்கும் வகையில் பூதாதி சொரூபமாக இருக்கக்கூடியவரே!பரிசுத்தமான தேவனே! சௌபாக்கியங்களின் அதிபதியாக இருக்கக்கூடியவரே! நீ வாழ்க!சதுர் வேதங்களின் நாயகனே!சூரிய சந்திராதி கிரகங்களும், அஸ்வினி நட்சத்திரங்களும், மூர்க்கமான திரவியங்களும், கண்களால் காணப்படக்கூடியவைகளுக்கும், கண்களால் காணமுடியாதவகைகளுக்கும், நான் உரைத்தவற்றைகளுக்கும், நான் உரைக்காமல் இருந்தவற்றைகளுக்கும், ஏன் சகலமாக இருக்கக்கூடியவரே! அனைத்து தேவர்களுக்கும், தேவதைகளுக்கும் மேலானவராக இருக்கக்கூடியவரே!இவ்விதமாக இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களின் ஆத்ம பூதமான இருக்கக்கூடிய உமக்கு தொண்டாற்றுகின்றேன். இவ்விதமாக பூமிப்பிராட்டியானவள் வெகுவாய் ஸ்ரீமந் நாராயணனை துதி செய்தார்.அந்த பூமியை தரிப்பவனான ஸ்ரீயப்பதியானவன் வராக ரூபத்திற்கு அனுகுணமான சாம வேதமயமான இர்குர் என்ற சப்தத்தினாலே பூமிப்பிராட்டியார் செய்த தோத்திரத்திற்கு திருவுள்ளம் உகந்ததை காட்டியருளினான். பிறகு மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையுடையவனும், கருநெய்தற் பூவையொத்து விளங்கும் திருமேனியுடையவனுமான மகா வராக ரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன், தனது கொம்பு நுனியினாலே பூமியை உயர எடுத்து மகா நீலமலைபோல பாதாளத்திலிருந்து எழுந்தருளினான்இவ்விதம் தோன்றிய ஸ்ரீயக்கிய வராக மூர்த்தியின் மூச்சுக்காற்று வேகத்தால் எழும்பிய வியர்வை ஜலமானது ஜனலோகம் வரைப் பாய்ந்து, அங்கு பகவத் தியானஞ்செய்து கொண்டு மிகவும் தூயவராயிருக்கும் ஜனக சனந்தருடைய தேகங்களிற்பட்டு, அவர்களை மேலும் தூயவராக்கியதுஅந்த நேரத்தில் வராக மூர்த்தியாரின் குளம்புகளால் (விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியை பாதுகாக்கும் கனமான நகம்) தாக்கப்பட்ட அந்த ஜலமானது அண்ட காகத்தின் உள்ளே பாதாளத்திற்கு மிகுந்த இரைச்சலுடனும், ஒலியுடனும் இறங்கியது. வராக மூர்த்தினுடைய சுவாச நிசுவாச (சுவாச கோச மண்டலம்) வேகத்தினால் பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்கள் யாவும் தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டனர்இவ்விதமாக பிரளயார்ணவோதகத்தினால் நனைந்திருந்த உருவத்தோடு தனது கோட்டு முனையில் பூமியை எடுத்துக்கொண்டு ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார்எழுந்தருளிய வராக மூர்த்தி, அவருடைய திருமேனியை உதறியருளுமளவில் அந்த வராக மூர்த்தியின் ரோம கூபங்களில் நின்று கொண்டிருந்த சனகசனந்தன தியான யோகிகள் ஆனந்தமடைந்து மிகுந்த பக்தியுடன் வராக மூர்த்தியை வணங்கி துதிசெய்து அருளினார்கள்பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களின் படைப்பு கடவுளான பிரம்மன் முதலான அனைத்து லோகங்களுக்கும் ஈஸ்வரன்களுக்கு எல்லாம் மேலான ஈஸ்வரனே! சங்கு, சக்கரம், கதை, வாள், வில் போன்ற பஞ்சாயுதங்களை தரித்தவனே! மூன்று விதமான தொழிலுக்கும் (படைத்தல், காத்தல், அழித்தல்) கர்த்தவாகவும், பிரபஞ்சத்தில் தோன்றிய அனைத்து உயிரினங்களையும் ஆள்பவனும் நீயே! சுவாமியே! வேதங்கள் யாவும் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றனயூபஸ்தம்பங்கள், உன்னுடைய கோரைப்பற்கள், யக்கியம் எல்லாம் உன்னுடைய தந்தங்கள், நானாவிதமான வேதிகைஸ்தானசயனம் எல்லாம் உன்னுடைய திருமுகத்தில் இருக்கின்றன. அக்னி உன்னுடைய நாக்காகும். உன்னுடைய ரோமங்கள் என்பது தர்ப்பை புற்கள் ஆகும். ஆகையால், யக்கிய ரூபமாய் யக்கத்தினால் ஆராதிக்கப்படக்கூடிய ஆதி புருஷனும் நீயே! இரவும், பகலும் உனது முகத்தில் இருக்கக்கூடிய இரு விழிகள் ஆகும்அனைத்து தேவர்களுக்கும் ஆதியான பிரணவமே உனது சிரசாகும். புருஷ சூக்தம் முதலான சூக்தங்கள் எல்லாம் உன்னுடைய பிடரியின் ரோமங்கள் சாமவேதமே! உன்னுடைய கம்பீரமான நாதம் பிராக் வம்சமென்கிற அக்னி சாலையின் முன்புறமானது உன்னுடைய திருமேனி!இப்படியாக மூர்த்தியாய், அனாதியாயுள்ள ஷட்குண ஐசுவரியை சம்பன்னனான எம்பெருமானே! உன் திருவடிவைப்பினாலே பூமியை ஆக்கிரமித்து பதம், கிரமம் என்ற ஏற்பாடுகளுடன் கூடிய அளவற்றதாய், ஆதியில் நின்ற சப்த பிரமமும் நீயே! அக்ஷர சொரூபியாயும், அழியும் தன்மையற்றவனாயும், சகல சொரூபியாயுமிருக்கிற ஸ்வாமி! சராசர மயமான உலகங்களுக்கு எல்லாம் நீயே ஒப்பில்லாத ஈஸ்வரன்! தம்தம் விருப்பங்களை பிரார்த்திக்கத்தக்கவனாக நீயே இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆகையால் உன்னையே பிரார்த்திக்கின்றோம்கிருபை செய்ய வேண்டும். திவ்வியமான உனது கோரைப் பல்லின் நுனியிலே காணப்படுகின்ற இந்த சமஸ்த பூமண்டலமானது தாமரை தடாகத்திலே பிரவேசித்து விளையாடிய மதயானையானது தனது கொம்பிலே, சேறுடன் கூடிய தாமரையை தூக்கிவந்தால் எப்படி காணப்படுமோ, அப்படி தோற்றமளிக்கிறதுஒப்பற்ற பலவிதமான சக்திகளை தன்னகத்தே கொண்டு இருப்பவனே, ஓ ஜகந்நாதா! மெய்யான பொருள் நீ ஒருவனேயன்றி வேறு எவரும் இல்லை. எப்படியெனில், சராசர மயமான சகலமும் உன்னால் வியாபிக்கப்பட்டு உனது திருமேனியாக இருப்பதனால், இவையாவுமே உனது மகிமையாகும். நீயே பரமார்த்தமாகிறாய்உலகத்துக்கு காரண பூதனாக இருக்கின்றவரே! அகமும், புறமும் நிலைத்து இருந்து யாவரிடத்திலும் வியாபித்திருக்கிற உன் மகிமை எடுத்து சொல்ல முடியாது தன்றே சத்து, அசத்து என்னும் விவேகம் இல்லாத அஞ்ஞானிகள், உன்னுடைய சரீரமான பிரபஞ்சத்தை பிராந்தி ஞானத்தால் வேறான தேவமனுஷ்யாதி ரூபமாக நினைக்கிறார்கள். புத்தியீனர்களான ஜனங்கள் ஞானமயமான தமது நிஜ சொரூபங்களை அறியாமல், தான் அமரன் என்றும், தான் மனுஷியன் என்றும், இது மிருகம், இது தாவரம் என்றும், பிராந்தி வசத்தினாலே நினைத்து மோகார்வணத்தில் மூழ்கியிருக்கிறார்கள் ஆத்ம சொரூபத்தை எவர் ஞானசொரூபமாக அறிந்து பகவானை அனுபவிக்கத்தக்க யோக நிலைக்குத்தக்கதான பரிசுத்த மனமுடையவர்களோ, அவர்கள் பிரகிருதி விகாரமான தேவ மனுஷ்யாகி ரூபமாக காணப்படுகிற இந்த பிரபஞ்சத்தையே ஞான குணமுள்ள ஆன்ம சொரூபமாகவும், உனது திருமேனியாகவும் காண்கிறீர்கள்யாவற்றிலும் அந்தர்மியாக இருக்கும் இறைவனே! சகல லோலகங்களுக்கு இருப்பிடமாக இருப்பவனே! யாவராலும் அறியமுடியாத மகிமையை உடையவரே! சேவிப்பவர்களின் இதயம் குளிரத் தகுந்ததான செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களை உடையவனே! இந்த பூமியை உத்தரித்து அடியேங்களுக்கு சுகத்தினை கொடுத்து அருள் செய்ய வேண்டும்கோவிந்தா! நீ உலக உபகாரத்திற்காகவன்றே சிருஷ்டியில் பிரவேசிக்கிறாய் உனக்கு தெண்டன் சமர்ப்பிக்கிறோம். அடியேங்களுக்கு சுகம் அருள்வாயாக! என்று ஜகன சனந்தனர் முதலிய யோகிகள் துதித்தார்கள். இப்போது ஸ்ரீவராக ரூபமுடைய பரமாத்மாவானவன் மகார்ணவத்திலிருந்து பூமியை எடுத்து பழையபடியே ஜலத்தின் மீது நிறுத்தி அருள்புரிந்தான்இவ்விதம், அந்தப் பெருவெள்ளத்தின் மேல் தோன்றிய பூமியானது, கப்பல்போல உருக்குவிந்து பரந்ததாகையாலே அது அந்த மகார்ணவ ஜலத்தில் மிதந்ததேயல்லாமல் மூழ்கவில்லை. பிறகு, சர்வகாரணனும், அனாதியுமான ஸ்ரீஹரிபகவான், பூதேவி பிரார்த்தித்த வண்ணம் அந்தப் பூமியில் தன்னுடைய சங்கல்ப மாத்திரத்தாலே, முன்பு எரிந்து போன பர்வதம் முதலியவற்றையெல்லாம், மீண்டும் முன்போலவே படைத்து அருளினான்இவ்விதமாக ஸ்ரீமந் நாராயணன், ரஜோ குணப்பிரமமாய், ஏழு தீவுகளாக இருக்கிற பூமியின் பகுதிகளையும் மற்றும் புவர்லோகம் முதலிய உலகங்களையும் மீண்டும் படைத்தருளினான்.