புண்ணியம்

bookmark

"கட்சியில இருந்து விலகிட்டியா..?"

"இல்ல... அவங்களாவே ஆள்குறைப்பு செய்துட்டாங்க!"

"உங்களுக்கு வந்திருக்கறது என்ன வியாதின்னு கண்டுபிடிச்சிட்டேன். ஆனா அதை உங்ககிட்ட சொல்ல மாட்டேன்; உங்க மனைவிக்கிட்டதான் சொல்லுவேன்!"

"சந்தோஷத்துல அவ அளவில்லாம பணத்தை அள்ளித் தந்துடுவாள்னு எதிர்பாக்கறீங்களா டாக்டர்..?"

"ராப்பிச்சை நோட்டுல என்னவோ எழுதிக் கொடுத்துட்டுப் போறானே... என்ன அது?"

"நம்ம கணக்கில இதுவரை எவ்வளவு புண்ணியம் சேர்ந்திருக்குன்னு வரவு வச்சிட்டுப் போறான்!"

"என் வீட்ல மனைவிதான் துவைப்பா, சமைப்பா, பாத்திரம் கழுவுவா... உன் வீட்ல?"

"உன்னை மாதிரி நான் பொய் சொல்ல விரும்பலை...!"

"ஆஸ்பத்திரி கேன்டீன்ல நெய் ரோஸ்ட் கேட்டது தப்பாப்போச்சு!"

"ஏன்...?"

"கொலஸ்ட்ரால் மாத்திரையும் சேர்த்து வாங்கினாத்தான் தருவாங்களாம்...!"