பிளாஸ்டிக் சர்ஜரி

bookmark

"டாக்டர்.... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய எவ்வளவு செலவாகும்...?"

"ஐந்து லட்ச ரூபாய் ஆகும்ங்க...!"

"ஒருவேளை நாங்களே பிளாஸ்டிக்கை கொண்டுவந்துட்டா எவ்வளவு குறைப்பீங்க...?"

"ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம் பெரிசா பாருங்களேன்!"

"யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!"

"ஏங்க... உங்க வீட்ல ஃபீஸ் போயி ஒரு மாசம் ஆவுது... இப்ப வந்து புகார் பண்றீங்களே?"

"ஹி.... ஹி! பவர் கட்னு நினைச்சிட்டோம்!"

"அவர் பிரம்மாண்டமான பல் டாக்டர்..."

"அப்படியா...?"

"ஆமா... "பல் செட்"டுக்குக்கூட தோட்டாதரணியைக் கூப்பிடுவார்னா பார்த்துக்கோயேன்!"

"குதிரை காணாமல் போனதற்கு மன்னர் ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காரு..."

"குதிரை மீது அவர் இருந்திருந்தால், அவரும் சேர்ந்தல்லவா காணாமல் போயிருப்பார் என்றுதான்...."