பிரெட் டோஸ்ட்

bookmark

கணவன்: இந்த புத்தகத்தை வைத்துதான் நம் சந்தோஷமான நாட்களை நினைவு கூற முடிகிறது!

மனைவி: அப்படியா, காட்டுங்கள். அந்த டைரியை நானும் பார்க்கிறேன்.

கணவன்: டைரியா, இது செக் புத்தகம்!

"ஜனங்க இந்த தீபாவளியை ரொம்ப சந்தோஷமா கொண்டாடுவாங்க..."

"எதை வச்சு சொல்றீங்க..?"

"இந்த தீபாவளிக்கு உங்க படம் ரிலீஸ் ஆகலைன்னு சொன்னீங்களே!"

புதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீர்கள் என்றால், மாலை உணவு தயாராகிவிடும்.

கணவன்: அப்படியா மாலை உணவு என்ன?

புதுமனைவி: டோஸ்டும், காபியும்தான்!

கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!

அவள்: நீ இப்படி எல்லா வேலையையும் மெதுவா செய்து கொண்டிருந்தால் நான் வேறு ஒரு வேலைக்காரியை பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்!

வேலைக்காரி: சீக்கிரம் பாருங்கள் அம்மா, எனக்கும் ஒருத்தியாக வேலை செய்வது பிடிக்கவில்லை!