பிராடு குடும்பம்
"உங்க மனைவி எதுக்கு உங்களை அடித்தார்கள்...?"
"பொறுத்தது போதும்... என்பதற்குப் பதிலா பெருத்தது போதுமுன்னு வாய் தவறிச் சொல்லிட்டேன்..!"
"என் மாமனார் சரியான ஏமாற்றுப் பேர்வழி...!"
"எப்படிச் சொல்ற...?"
"எனக்குச் சீதனமா ஒரு வீடு தர்றேன்னு சொல்லி விட்டு அவரோட சின்ன வீட்டைக் கொடுத்திட்டார்."
மனைவி: மாமியார் தொல்லை தாங்க முடியலை ஏதாவது செய்யுங்க...ன்னு சொன்னா இப்படி இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கீங்களே...?
கணவன்: மாமியாரோட சண்டை போடும் போது உனக்குத் துணையா இருக்கட்டுமேன்னுதான்!
"நடிகைகள் ஏன் அடிக்கடி விவாகரத்து பண்றாங்க?"
"அடிக்கடி கலியாண சீன்லே நடிக்கிறாங்க இல்லையா?"
"பொண்ணு பார்க்கும் போது தங்கச்சியைக் காட்டினாங்க! கலியாணம் முடிக்கும் போது அக்காளுக்குத் தாலிகட்டி அனுப்பிச்சிட்டாங்களே! இது பிராடு குடும்பம் போல இருக்கே?"
யாரு பிராடு குடும்பம்? மகனை மாப்பிள்ளையாக் காட்டிட்டு அப்பன் கலியாணம் பண்ணிட்டு வந்துட்டானே?"
