பினாயில்
"விபரம் தெரியாத மக்களெல்லாம் நம்ம பக்கந்தானே இருந்தாங்க.... அப்பறம் எப்படி நம்ம கட்சி தோத்துப் போச்சு?"
"அவங்க போட்டதெல்லாம் செல்லாத ஓட்டாப் போச்சு!"
"சுவாமி! நீங்கள் திருமணமான பின் தான் துறவி ஆனீர்களா?"
"சீடனே! எப்படிக் கண்டுபிடித்தாய்?"
"உடம்பெல்லாம் காயம்பட்ட தழும்புகள் நிறையத் தெரியுதே!"
"தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்யுங்கன்னு எம்.எல்.ஏ. கிட்டே கேட்டோம்."
"என்ன சொன்னாரு?"
"வெளியாட்களைக் கொண்டு ஓட்டுப் போட வச்சித்தானே ஜெயிச்சேன். உங்களுக்கு நான் ஏன் செய்யணுமின்னு சொல்லிட்டுப் போயிட்டார்!"
ஒருவன்: என் பெண்டாட்டி வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கற டைப்.
மற்றவன்: உங்க வீட்டுப் பால் பாயசத்திலே பினாயில் வாசனை அடிக்கறப்பவே நினைச்சேன்.
நிருபர்: நீங்க எல்லாரையும் தரக்குறைவா பேசுறீங்களாமே?
அரசியல்வாதி: நானா! எந்த மட நாயி உங்ககிட்டே சொன்னான்?
