பள்ளிபடைப் படலம் - 2307
2307.
‘தீ அன கொடியவள்
செய்த செய்கையை
நாயினேன் உணரின், நல்
நெறியின் நீங்கலாத்
தூயவர்க்கு இடர் இழைத்து
உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி
அதனின் வீழ்க, யான்’
தோம் - குற்றம். நல்லவர்க்குத் தீங்கு செய்யும் கயவர்கள் செல்லும்
நரககதியில் நான் செல்வேனாக. 116-1
