பள்ளிபடைப் படலம் - 2212
2212.
எள் குலா மலர் ஏசிய நாசியர்,
புள் குலா வயல் பூசல் கடைசியர்,
கட்கிலார் களை; காதல் கொழுநரோடு
உள் கலாம் உடையாரின், உயங்கினார்.
எள்குலா மலர் - என் அழகு விளங்கும் மலரை; ஏசிய- (தன்
அழகால்) பழித்த; நாசியர் - மூக்கை உடையவராகிய; புள்குலா வயல் -
பறவைகள்மகிழ்ந்து திரிகின்ற வயலிலே; பூசல் - தொழில் செய்கின்ற;
கடைசியர் -உழத்தியர்; காதல்கொழுநரோடு - தம்மால் அன்பு
செய்யப்பெற்ற கணவரோஈடு; உள்கலாம் உடையாரின்- உள்ளே
பிணக்கு உடையாரைப்போல்; களைகட்கிலார்- களை
பறிக்காதவர்களாய்; உயங்கினார் - வாடிக்கிடந்தார்.
கணவரோடு ஊடிய மகளிர் தொழில் செய்ய விருப்பமின்றி இருத்தல்
போலக் களைபறியாமல்இருந்தனர் கடைசியர். எள்மலர் - மூக்கிற்கு
உவமை. பூசல் - ஒலி - ஈண்டு ஒலிக்கு இடனாகியதொழிலைக் குறித்தது;
இலக்கணை என்பர். 22
