பரசுராமப் படலம் - 1349
கோசிகன் தவம் புரியச் செல்லுதல்
1349.
தான் ஆவது ஒர் வகையே நனி
சனகன் தரு தயலும்
நானா விதம் உறு போகமும்
நுகர்கின்ற அந் நாள்வாய்.
ஆனா மறை நெறி ஆசிகள்
முனி கோசிகன் அருளி.
போனான் வட திசைவாய். உயர்
பொன் மால் வரை புக்கான்.
சனகன் தரு(¬)தயலும்- சனகன் தந்த பெண்ணாகிய சீதையும்;
தான் ஆவது ஒர் வகையே நனி நானா விதம் உறு போகமும் -
இராமனும். எடுத்த அவதாரத்திற்கேற்ப மிகுதியான பல்வகைப்
போகங்களையும்; நுகர்கின்ற அந்நாள் வாய் -அநுபவிக்கின்ற
அக்காலத்திலே; முனிகோசிகன் ஆனாமறை நெறி ஆசிகள் அருளி-
நெறி நன்கு உணர்ந்த விசுவாமித்திர முனிவன் அழியாத வேத
ஆசிகளை (மணமக்களுக்கு) அருளிச்செய்து விட்டு; போனான் -
புறப்பட்டான்; வடதிசைவாய் உயர் பொன்மால் வரை புக்கான் -
வடக்குத் திசையில் சென்று உயர்ந்தோங்கிய அழகிய
பெருமலையாகிய இமயமலையை (தவஞ்செய்தற் பொருட்டுச்)
சென்றடைந்தான்.
“தானும்” என்பதில் உள்ள உம்மை தொக்குத் “தான்” என்
நின்றது. அது. இராமனைக் குறித்தது. 1
