பன்றிக் காய்ச்சல் மருந்து ரெடி

bookmark

1. "இந்த டாக்டர் இதுக்கு முன்னால ஹோட்டல் வச்சிருந்தவர்னு எப்படிச் சொல்றே...?" 

"ஆஸ்பத்திரி வாசல்ல பிளாக்போர்டு வச்சு, "பன்றிக் காய்ச்சல் மருந்து ரெடி"ன்னு எழுதிப் போட்டிருக்காரே...!"

வீ.விஷ்ணுகுமார்

2. "இனிமே நீங்க குடிக்கறதை பாதியா குறைக்கணும்..."

"ஏன் டாக்டர்...?"

"எனக்கு இப்படி ஃபீஸ் பாக்கி வச்சா, அப்புறம் நான் எப்படி தண்ணி அடிக்கறதாம்...?"

அதிரை புகாரி

3. "என் வீட்டுக்காரருக்கு சந்தோஷம் வந்துட்டா தலை, கால் புரியாது முனியம்மா..."

"உண்மைதான்மா... தலை வலிக்குதுன்னு என்னோட தலையை அமுக்கிவிடச் சொன்னா, காலை அமுக்கி விடறாரு!"

சி.பரத்

4. "சின்னதா ஒரு கார் வாங்கணும்னு ஷேர் புரோக்கர்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சு!"

"ஏன்?"

"முதல்ல பெரிசா ஒரு கார் வாங்குங்க... பிறகு அதை வித்துட்டு அந்தப் பணத்துல சின்னதா கார் வாங்கலாம்னு சொல்றாரு!"