பட்டாசு

bookmark

1. "இந்த பட்டாசுக்கு எதுக்காக வடிவேலு வெடின்னு பேரு வெச்சிருக்காங்க..?" 

"வெடிக்கும்.... ஆனா, வெடிக்காது! அதான்..."

வீ.விஷ்ணுகுமார்

2. "தலைவர் வச்ச தண்ணி பார்ட்டிக்குப் போய் ஏமாந்துட்டேன்..."

"ஏன்..?"

"ஆளுக்கொரு மினரல் வாட்டர் பாட்டில் குடுத்து அனுப்பிட்டாரு..!"

அனார்கலி

3. ஒருவர்: என்னோட பையன்தான் ஸ்கூல்லேயே நம்பர் ஒன்...

மற்றொருவர்: அப்படியா..?!

ஒருவர்: ஆமா... ஏழு மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு முதல் ஆளா போயிடுவான்..!

ஜி.எம்.மஞ்சரி

4. "என்ன சார்? கரும்பு ஜூஸ்ல ஏதோ மிதக்குது...?"

"விடுங்க சார்... எறும்பு ஜூஸ்னு நினைச்சு குடிச்சிடுங்க!"

கற்பகம்