பச்சை திராட்சை
பச்சை திராட்சை உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளும். எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் பச்சை திராட்சை சாப்பிடுவது மிகவும் நல்லது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து, தொற்று ஏற்படுவதை தடுக்கும். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு திராட்சை மிகவும் சிறந்தது.
தினமும் பச்சை திராட்சை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை மற்றும் வயிறு எரிச்சல் போன்றவை குணமாகும். பச்சை திராட்சை சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது.
இந்த பழம் இரத்தத்தை சுத்திகரிப்பதோடு, வயிற்று புண் மற்றும் குடல் பிரச்சனைகளை சரி செய்யும்.
