நாட்டுப் படலம் - 92
கோசலநாடு ஊழிபேரினும் பேராச்சிறப்பினதனெல்
92.
வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
ஊடு பேரினும், உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம்.
வீடு சர நீர்வேலை கால்மடுத்து ஊடு பேரினும் - நிலம்
முழுவதும் அழியுமாறு கடல் பெருங்காற்றால் மோதுண்டு வந்தாலும்;
உலைவு இலா-அழியாத; நலம் கூடும் ‘கோசலம்’ என்றும் கோதிலா
நாடு கூறினாம் - நன்மைகள் சேர்ந்த கோசலம் என்று குற்றமற்ற
நாட்டின் சிறப்பைச் சொன்னோம்; நகரம் கூறுமாம் - (இனி) அந்த
நாட்டின் தலைநகரான அயோத்தி மாநகரின் சிறப்பைச்
சொல்லுவோம்.
வீடு (விடுதலை) - முதனிலைத் தொழிற்பெயர். நாடு,
நகரம்-ஆகுபெயர்கள். 61
