நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க

bookmark

"எதுக்கு நர்ஸ் மடியில படுத்திருக்கீங்க....?"

"வசதிப்பட்ட இடத்துல படுத்துத் தூங்கச்சொல்லி நீங்கதானே டாக்டர் சொன்னீங்க...!"

அம்பை தேவா, சேரன்மகாதேவி


"நீ வீட்டுக்கு லேட்டாப் போனா, உன் மனைவி ரொம்ப சந்தோஷப்படுவாங்களா... ஏன்?"

"என்னை அடிக்கறதுக்கு அவளுக்கு ஒரு காரணம், கிடைச்சுடுச்சேன்னுதான்!"

கூடல்


"டாக்டர், என் மனைவி தினமும் தூக்கத்துல எழுந்து நடக்கறா..."

"இதுக்குப்போய் நீங்க ஏன் கவலைப்படறீங்க..?"

"தனியா நடக்க பயமா இருக்குன்னு என்னையும் எழுப்பிடறா டாக்டர்!"

வி.சாரதி டேச்சு


"உங்க கணவர் கொஞ்சம் கொஞ்சமா பொம்பளையா மாறிக்கிட்டு வர்றார்னு எதை வச்சும்மா சொல்றீங்க..?"

"சாயந்திரமானா சமையல் வேலைகளைக்கூட கவனிக்காம மெகா சீரியல் பாக்க ஆரம்பிச்சுடறாரு டாக்டர்!"

சரவணன்


"கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?"

"பின்னே.... 'கபாலி சென்னைக்குப் போயிருக்கான்'கிறதை 'களவாணி மதராசபட்டினம் போயிருக்கு'ன்னு சொல்றாளே!"

ரிஷிவந்தியா