நகரப் படலம் - 97

bookmark

அயோத்தியே புண்ணியபூமியும் போகபூமியுமெனல்

97.    குறியவன் கையில் நீர் விழாமல். குண்டிகை
மறிபட. வாமனன் மலர்க் கைத் தர்ப்பையால்.
செறிவது நீக்கிட. சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கிப் போயினான்.
 
குறியவன்- வாமனன்; குண்டிகை - கமண்டலம்; மறிபட - தடுத்து
நிற்க;  செறிவது -  செறிந்து நிற்பது; உடைந்து - கெட்டு; உறுதுயர் -
மிக்க துயர்.                                              23-1